நீரிழிவை கட்டுப்படுத்தும் திரிபலா !
திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றையும் குறிப்பதாகும். இம்மூன்றும் இணைந்து தரப்படும் மருந்து.
திரிபலா ஆறு சுவைகளையும் கொண்ட அற்புதமான மருந்து.
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்த்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம். மேலும்,
1. இரைப்பை பலவீனத்தை சரிசெய்து, உணவிலிருந்து சுத்தமான அன்னரசத்தை பிரிக்க உதவுகிறது. (EXTRACTS)
2. ரத்ததை தேவையான அளவு உற்பத்தி செய்யவும், இரத்தக் கழிவுகளை வெளியேற்றவும், ரத்தத்தில் கலந்த பித்தத்தையும் வெளியேற்றிட உதவுகிறது.
3. இதன் துவர்ப்புத் தன்மையால் அதிஉஷ்ணம் தணிந்து உள்ரணம் ஆற்றப்படுகிறது.
4. நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம் அனைத்தையுமே சீர்ப்படுத்துகிறது.
மொத்தத்தில் உடம்பைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை திரிபலாவிற்கு உண்டு.
திரிபலா சேர்க்காத சித்த மருந்தே இல்லை எனலாம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உடல் தேய்வினைத் தடுக்கவும் திரிபலா ஒரு நன்மருந்து.

Comments
Post a Comment